அரசியல்

Om Birla | Parliament | "மக்களவைக்குள் கால் வைக்க மாட்டேன்.." - ஓம் பிர்லா அதிரடி முடிவு

"மக்களவைக்குள் கால் வைக்க மாட்டேன்.."

thanthitv

#OmBirla | #Parliament | #Congress | #NationalNews | #ThanthiTV Om Birla | Parliament | "மக்களவைக்குள் கால் வைக்க மாட்டேன்.." - ஓம் பிர்லா அதிரடி முடிவு தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நிறைவடையும் வரை மக்களவையை வழிநடத்தவோ அல்லது மக்களவையில் நுழையவோ மாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா தீர்க்கமாக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இரண்டு நாட்களாக சபாநாயகர் மக்களவை நடவடிக்கையில் தாமாக முன்வந்து பங்கேற்காமல் உள்ளார். இதை தவிர எதிர்க்கட்சிகள் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸில் பல்வேறு எழுத்துப் பிழைகள் இருந்த நிலையில், அவற்றை ரத்து செய்ய தமக்கு அதிகாரம் இருக்கும் போதும், எழுத்துப் பிழைகளை சரி செய்து அவற்றின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையை விரிவுபடுத்துமாறு மக்களவை செயலகத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு

Tasmac Issue | `டாஸ்மாக்’ விவகாரத்தில் கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை

Cracker Factory Fire Accident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து