அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெல்லிதோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கி சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.