2019-2020ம் நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக பல்வேறு மாநில அரசுகளுக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 302 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு வழங்கப்படவேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையும் மாநில அரசுகளுக்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழகத்திற்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடாக 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சகம் கூறியுள்ளது . 2017 -18 ஆம் நிதியாண்டு மற்றும் 2018 -19 ஆம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட கலால் வரியின் மீதம் உள்ள தொகை ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக உபயோகப்படுத்தப் படுவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.