அரசியல்

``பலாப்பழம் சின்னத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு’’ - களத்தில் சுற்றி சுழலும் ஓம்சக்தி சேகர்

thanthitv

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர், தோல்வி பயத்தில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் தனக்கு பல்வேறு இடர்பாடுகளை தருவதாக கூறியுள்ளார். டி.ஆர். நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட ஓம்.சக்திசேகருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 10 ஆண்டுகளில், தொகுதியைச் செம்மையாக மாற்றியதாகவும், ஆனால், தனக்குப் பிறகு வந்தவர்கள் மக்களைப் புறக்கணித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் இந்த தேர்தலில் தனக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay Chennai Campagin Case | விஜய் பிரச்சாரம் - இடிபோல் விழுந்த அடுத்த பேரதிர்ச்சி

Tvk Vijay || டெல்லிக்கு பறக்கும் தவெகவினர்? விடிந்ததும் வெளியான பரபரப்பு தகவல்

TVK | vijay | Case |காலையிலேயே ஷாக்.. விஜய் மீது பாய்ந்தது வழக்கு.. தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு

Breaking | DMK | Stalin | கூட்டணி கட்சி தலைவர்களுடன்திடீரென மீட்டிங் போட்ட முதல்வர்

Seeman | NTK | "சொந்தமாக வீடு இல்லை.." சீமானின் சொத்து எவ்வளவு.. வெளியான லிஸ்ட்