அரசியல்

பரம்பரை ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது - அமித்ஷா கருத்து

பரம்பரை ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்றும், பயனற்ற அரசு தான் அமையும் என்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பரம்பரை ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்றும், பயனற்ற அரசு தான் அமையும் என்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், கந்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மூன்றாவது காந்தியையும் கொண்டு வந்துள்ள நிலையில், ஊழல் தான் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கு பின்னர், பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், மேற்கு வங்கத்தை பொறுத்தவரை ஜனநாயகம் மீண்டும் மலரும் என்று மறைமுகமாக மம்தா பானர்ஜி அரசை அமித்ஷா விமர்சித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்