#Congress #GanapathySivakumar #TNPolitics #ThanthiTV Congress | Ganapathy Sivakumar | தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய கணபதி சிவக்குமார் வலியுறுத்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் செயல்பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் 'வாக்குத் திருட்டு' புகார்களை உறுதிப்படுத்துவதாகக் கூறி, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். ஆங்கில நாளிதழின் செய்தியை சுட்டிக்காட்டிய அவர், "வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது பிற தேர்தல் ஆணையர்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக 14 முறை எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது" என குற்றம் சாட்டினார். மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளத்தை பயன்படுத்தி 'தர்க்கரீதியான முரண்பாடு' என்ற பெயரில் லட்சக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.