அரசியல்

Ganapathy Sivakumar | “திமுகவால் ஏற்க முடியவில்லை'' - கணபதி சிவக்குமார்

Ganapathy Sivakumar | “திமுகவால் ஏற்க முடியவில்லை'' - கணபதி சிவக்குமார்

thanthitv

Ganapathy Sivakumar | “காமராஜர் பெயரில் திட்டம் மாற்றப்பட்டதை திமுகவால் ஏற்க முடியவில்லை'' - கணபதி சிவக்குமார்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்குப் பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டதை திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு பேசிய கருத்துகளுக்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டைப் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராஜரின் பெயரை இத்திட்டத்திற்குச் சூட்டியதில் எந்தத் தவறும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 1961-ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் நேருவால் காமராஜர் சிலை திறந்து வைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை ஏ.வ. வேலு தவறாகப் பதிவிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய கணபதி சிவக்குமார், பெருந்தலைவர் காமராஜரின் வரலாற்றையும் அவரது எளிமையையும் அரசியல் ஆதாயத்திற்காகத் திரித்துப் பேசக் கூடாது என்றும் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | Revanth Reddy | CMகள் மாநாட்டில் திடீர் திருப்பம்.. ஆப்சென்டான ரேவந்த் ரெட்டி..!

Minister N Anand | "எங்க உயிர், மூச்சு, நாடியெல்லாம் தலைவர் தான்.." - அமைச்சர் ஆனந்த் நெகிழ்ச்சி

BREAKING || ஊட்டி, கொடைக்கானலில் ரோப் கார்? - சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

Minister Anand | CM Vijay | "திரையில பாத்துருப்பீங்க.." - "நான் 28 வருஷமா.." - எமோஷனலான அமைச்சர்

BREAKING || "நிதியுதவி ரூ.3000 ஆக உயர்வு" - முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ராஜ்மோகன்