அரசியல்

Ganapathi Sivakumar | Udhayanidhi Stalin | உதயநிதி மாண்பறிந்து செயல்பட வேண்டும் - கணபதி சிவக்குமார்

Ganapathi Sivakumar | Udhayanidhi Stalin | உதயநிதி மாண்பறிந்து செயல்பட வேண்டும் - கணபதி சிவக்குமார்

thanthitv

Ganapathi Sivakumar | Udhayanidhi Stalin | உதயநிதி மாண்பறிந்து செயல்பட வேண்டும் - கணபதி சிவக்குமார்

பாலியல் குற்றங்கள் குறித்துப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குச் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் தொடர்ச்சியான அரசியல் அறிக்கைகளுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் ஆட்சி சரியான பாதையில் செல்வதை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனக் விமர்சித்துள்ளார். அரசியல் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவசர அவசரமாக அறிக்கை வெளியிடுவது கேலிக்கூத்தாக உள்ளது என்றும், பாலியல் குற்றங்கள் குறித்துப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகச் சம்பவத்தின் போது எழுப்பப்பட்ட ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கணபதி சிவக்குமார், மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்பாகத் தனது கட்சியின் கடந்த காலச் சம்பவங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Heavy Rain | Kovai | "நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.." கோவை ஆட்சியர் அறிவிப்பு

College | TN Rains | நாளை விடுமுறை.. கொடைக்கானல்அரசு கலைக் கல்லூரி அறிவிப்பு

School Leave | TN Rains | Dindigul | "பள்ளிகளுக்கு விடுமுறை.." திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

Cyclone Alert | திசையை மாற்றி `ரூட்’ எடுத்த சிஸ்டம் - நாளை காலையே.. ஸ்பாட் காட்டும் மேப்

Kovai Rain | தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் சூறையாட்டம் ஆடிய மழை