அரசியல்

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் வளர்மதி

தந்தி டிவி

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திறந்து வைத்தார். அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான மணிமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு மோர், தார்பூசனி, கிர்னி, பலா, வாழை உள்பட பழங்களை ஆயிரம் பேருக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன் உள்ளிட்டோர் பழங்கள், ஜூஸ், குடை வழங்கினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்