அரசியலில் போலவே திரை வாழ்க்கையிலும் தனிப்பெரும் ஆளுமையாக இருந்த ஜெயலலிதாவின் திரை பயணத்தின் ஆயுள் 20 ஆண்டுகள். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் ஜொலித்தவர் ஜெயலலிதா... ஆரம்பத்தில் சிறு சிறு காட்சிகளில் தோன்றிய ஜெயலலிதா, முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானது, 1964ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான சின்னாட கோம்பே என்ற கன்னட படத்தில். அப்போது அவரது வயது 15. அந்த படத்துக்கு வாங்கிய சம்பளம் 3 ஆயிரம் ரூபாய். அதே ஆண்டில், தமிழில் வெண்ணிற ஆடையில் அறிமுகமாகி, அடுத்த ஆண்டிலேயே எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா.