Kovai | SP Velumani | ADMK | எஸ்.பி. வேலுமணி காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை #coimbatore #SPvelumani #ADMK #tnelection2026 #thanthitv கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்ற காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற தேர்தலில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல், தொகுதி முழுவதும் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், இன்று காலை வழக்கமாக எஸ்.பி. வேலுமணி பிரசாரத்திற்கு சென்ற போது, கோவை பிரிவு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை வழிமறித்து சோதனையிட்டனர். காரில் இருந்து கீழே இறங்கிய எஸ்.பி. வேலுமணி அதிகாரிகள் தமது காரை சோதனையிட ஒத்துழைப்பு அளித்தார். பறக்கும் படை அதிகாரிகள் சோதனை முடிந்த பின்னர் வாக்கு சேகரிக்கும் பணிக்காக, எஸ்.பி. வேலுமணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.