அரசியல்

பட்டாசு ஆலை விபத்து - முதலமைச்சர் இரங்கல் - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாயை நிவாரணமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாயை நிவாரணமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட அறிவுறுத்தியுள்ள அவர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தாம் உத்தவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்