நேர்மையானவர்களுக்கு அரசியல் சுலபமான படிக்கட்டு இல்லை என்றும், தற்போது இணையதள காலத்தில் பயணிக்கும் நமது சமுதாயத்திற்கு ஒழுக்கம் அவசியம் வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். சென்னை தனியால் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், ஒரு காலகட்டத்தில் அழிக்க முடியாததாக தொழுநோய் இருந்தது என்றும், தற்போது அது ஒழிந்துவிட்டது என்றும் தெரிவித்தார். தற்போது சமுதாயத்தில் இருந்து ஒழிக்க வேண்டியது சாதி தான், அதனை நாம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.மாற்று திறனாளிகளை நம் குடும்பமாக என்ன வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறைகூவல் விடுத்துள்ளார்.