அரசியல்

Rahul Gandhi `எப்ஸ்டீன் பைல்ஸ்' - புது புயலை கிளப்பிய ராகுல்

`எப்ஸ்டீன் பைல்ஸ்' - புது புயலை கிளப்பிய ராகுல்

thanthitv

#Epsteinfiles | #pmmodi | #rahulgandhi `எப்ஸ்டீன் பைல்ஸ்' - புது புயலை கிளப்பிய ராகுல் பிரதமர் மோடி உடனடியாக ‘எப்ஸ்டீன் பைல்ஸ்' மற்றும் தொழிலதிபர் அதானி மற்றும் அனில் அம்பானி உடனான தனது தொடர்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அவர் இளைஞர் காங்கிரசாரை சிங்கங்கள் என பாராட்டியதோடு, அவர்கள் பிரதமர் மோடிக்கு அஞ்சாதவர்கள் என்றும் தெரிவித்தார். அதோடு பிரதமர் மோடி உரையாற்றும் போது, அவரது கண்ணில் பயத்தை காண முடியும் என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், முன்னாள் ராணுவ தளபதி நரவனே புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசிய ராகுல் காந்தி, சீன பீரங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவல் போன்ற முக்கிய தலைவர்கள் யாரும் அப்போதைய ராணுவ தளபதி நரவனேக்கு பதிலளிக்கவில்லை என்றும், அன்று இந்தியாவில் ராணுவ தளபதி தனித்து விடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

CM Stalin Speech | "சூப்பர் ஹிட்டு.. ஹிட்டோ ஹிட்டு" - வெளிப்படையாக அடித்த முதல்வர்

CM Stalin | "குமரிக்கு 6 முக்கிய அறிவிப்புகள்.." - இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

BREAKING || கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி - உச்சகட்ட பரபரப்பில் ஆந்திரா

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு