ஈபிஎஸ்-யின் பரபரப்பு X பதிவு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தன்னால்தான் வந்தது என்பதுபோல் முதலமைச்சர் தம்பட்டம் அடித்துக்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் களவை நிறைவேற்றுவதற்காக, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தனது தலைமையிலான அரசு கொண்டுவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக்கிவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் கடந்த 3 மாதங்களாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, அடிக்கல் நாட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் வரிப் பணத்தில் விளம்பரம் தேடுவது இனியும் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.