அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் பள்ளிகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் கல்வி குறித்து பரீசிலிக்கப்படுவதாகவும் கூறினார்.