ஒரு சிலரை திருப்திபடுத்தவே ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர்ந்து அமலாக்கத்துறை போலியான விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த விசாரணையின் முடிவில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் இதனை தெரிவித்தார்.