அரசியல்

"எலக்‌ஷன் டியூடி".. சுத்தவிட்ட தேர்தல் அதிகாரிகள்

தந்தி டிவி

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒரே தொகுதிக்குட்பட்ட அண்டை மாவட்டங்களுக்கு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சொந்த மாவட்டத்தில் அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்படும் அதிகாரிகள், ஒரே நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்டங்கள் அல்லது அண்டை மாவட்டங்களில் பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. பணியிடமாற்ற கொள்கையை பெயருக்காக பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்லாமல், உண்மையான உணர்வுடன் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கும், பின் தேதியிட்டு இந்த உத்தரவு பொருந்தும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADMK | Edappadi Palaniswamy | EPS | "நம்ம கூட்டணியில்..." - பெயரை சொல்லிய ஈபிஎஸ்

EPS Campaign | "பச்சை பொய்.. பல பேருக்கு தெரியல" - பிரசாரத்தில் EPS ஆவேசம்

CM Stalin | DMK | Nirmala Sitharaman | "குட்டு அம்பலமாகிவிட்டது" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு போஸ்ட்

TVK VIjay | பரபரப்பான பொள்ளாச்சி விடியோ.. ஆவேசமான விஜய்

Asha Bhosle | Funeral | மௌனித்த ஆஷா போஸ்லேவின் இன்னிசைக் குரல் - இதயத்தை உருக்கும் இறுதி ஊர்வலம்