துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளதென, அவர் மீது திருவல்லிக்கேணி போலீசில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார். ஆனால் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உமாபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, மனுவை தள்ளுபடி செய்ததுடன், தனிப்பட்ட முறையில் ரஜினிக்கு எதிராக புதிய மனுத்தாக்கல் செய்ய, மனுத்தாரருக்கு அனுமதியளித்தார்.