அரசியல்

"ஆட்சியில் முறைகேடு.. ஈபிஎஸ்-க்கு எதிராக.." - விஜிலென்ஸ்-க்கு கிரீன் சிக்னல் போட்ட ஐகோர்ட்

தந்தி டிவி

அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முறைகேடு புகாரில் ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகவும், டெண்டர் வழங்கியதில் மற்றும் கட்டுமானத்தில் முறைகேடு நடைபெற்றதாக இரண்டு விதமாக முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு திருப்தி தெரிவித்ததால், இந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

-------

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்