எழும்பூர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு, மே மாதம் 14ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. வழக்கு தொடர்ந்த பிறகு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தியது தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளதாகவும் தோல்வி விரக்தியில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி முன் வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். தொகுதி மேம்பாட்டு நிதியில் 95 சதவீதம் நிதியை பயன்படுத்தி உள்ளேன் என தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.