தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தொண்டர்களால் வளர்ந்த இயக்கம் என்றும், இங்கு அனைவருக்கும் உரிய மரியாதை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். அனைவரும் இணைந்து இயக்கத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.