காஞ்சிபுரத்தில் அண்ணாவின், பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர், தமிழகம் தொடர்ந்து மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், மின்வாரியத்தின் கடனை தமிழக அரசு படிப்படியாக அடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில், டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெறவில்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையிலான ஆட்சியில் சிங்கிள் கவரில் ஒரு டெண்டர் கூட விடப்படவில்லை என்றும் கூறினார்.