சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிலங்களை ஒதுக்கீடு செய்வது, மருத்துவமனை கட்டமைப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.