முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜாத் சிங் சித்து, பீகாரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 72 மணி நேரத்துக்கு, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் பேசவும், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவும், ஊர்வலங்களில் கலந்துகொள்ளவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.