தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மற்ற நாடுகளை விட இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறைவு என்றும், அதற்கு காங்கிரஸ் , தி மு க கட்சிகள் கொண்டு வந்த திட்டங்கள் தான் அடிப்படை என்ற குறிப்பிட்டார்.