அரசியல்

திருப்பரங்குன்றம் தேர்தலை நடத்த வேண்டும் - மருத்துவர் சரவணன்

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

நேற்று நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை. வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் பின்னர் தெரிவித்தது.

இந்த நிலையில் மனு தாரர்கள் இந்த வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் என்பவர், தேர்தல் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும், தொகுதி மக்களின் நலன் கருதி இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை ஏற்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்