அரசியல்

Congress | TVK | MK Stalin | "திமுகவின் உண்மையான எதிரி வெளியே இல்லை"- கணபதி சிவக்குமார்

"திமுகவின் உண்மையான எதிரி வெளியே இல்லை"- கணபதி சிவக்குமார்

thanthitv

"திமுகவின் உண்மையான எதிரி வெளியே இல்லை"- கணபதி சிவக்குமார்

#congress #mkstalin #dmk #tvk #byelection #thanthitv

இடைத்தேர்தல் முடிவுகளை விருப்பமில்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி, மதம் பார்க்காமல், பணம் பெறாமல், தங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் எனச் சிந்தித்து மக்கள் வாக்களித்ததன் விளைவுதான் இடைத்தேர்தல் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 30, 40 ஆண்டுகளில் இதுபோன்ற நியாயமான இடைத்தேர்தல் நடந்ததில்லை என்பதை ஸ்டாலினின் மனசாட்சியே அறியும் என்றும் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ள முயன்றதைப் போல, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியைத் தோல்விகரமான வெற்றி எனக் கூறி சமாதானம் அடைவதால் வளர முடியாது என்றும் விமர்சித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிரி யார் என்பதைக் கணிக்கத் தவறியதால் தோல்வி ஏற்பட்டதாகக் கூறிய ஸ்டாலின், இந்த இடைத்தேர்தலில் எதிரி யார் என்பது தெரிந்துதானே களம் கண்டார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவின் உண்மையான எதிரி வெளியே இல்லை என்பது ஸ்டாலினுக்கு எப்போது புரியப்போகிறது என்றும் கணபதி சிவக்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Flydubai | NIA | ஃபிளை துபாய் விமான சம்பவத்தில் திருப்பம்.. தீவிரமாக இறங்கிய NIA

Joshna Chinappa | பதக்கங்களை குவித்த ஜோஷ்னா சின்னப்பா.. பதவி உயர்வு கொடுத்த தமிழக அரசு

CM Vijay | Rahulgandhi | CM விஜய் வீட்டில் ராகுல்காந்தி.. வெளியான முக்கிய வீடியோ

CM Vijay | Rahul Gandhi | விருந்து முடிந்ததும் MS Dhoni cafe-க்கு வண்டியை விட்ட CM விஜய்

CM Vijay | Rahul Gandhi | விருந்து முடிந்ததும் MS Dhoni cafe-க்கு வண்டியை விட்ட CM விஜய்