அரசியல்

Rajiv Gandhi DMK | தீயாய் பரவிய ஸ்கிரீன்ஷாட்ஸ்.. ராஜீவ்காந்தி விளக்கம்

thanthitv

போலி சமூகவலைதள கணக்கை வைத்து அவதூறு என திமுக ராஜீவ் காந்தி விளக்கம் ஒருபோதும் ஒருவரிடமும் தான் தவறாக நடந்து கொண்டதில்லை என திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியதாக, ராஜீவ் காந்தி மீது குற்றச்சாட்டை முன்வைத்து வெளியான ஸ்கீரின் ஷாட்டுகள், பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜீவ் காந்தி, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமக்கு எதிராக போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார். போலி சமூக வலைதள கணக்கை உருவாக்கும் செயலியின் லிங்கையும் இணைத்து பதிவிட்டுள்ள அவர், அதனை வைத்தே தனக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். தான் யாரிடமும் தவறாக நடந்துகொண்டதில்லை எனவும், யாருக்காவது தன் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தால், வந்து கொலை கூட செய்யுங்கள் எனவும் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி