அரசியல்

திமுக தென்மண்டல நிர்வாகிகள் மாற்றம்

திமுகவில் மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர் உட்பட தென்மண்டல நிர்வாகிகள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

தந்தி டிவி

திமுகவில் மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர் உட்பட தென்மண்டல நிர்வாகிகள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை மாநகர் வடக்கு மற்றும் மதுரை மாநகர் தெற்கு என செயல்பட்டு வந்த மாவட்டங்கள், மதுரை மாநகர் மாவட்டம் என ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன், மாவட்ட பொறுப்பாளராக தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பொறுப்புக்குழு உறுப்பினர்களாக வேலுச்சாமி, குழந்தைவேலு, பி.எஸ்ஸார் கோபி, டாக்டர் சரவணன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முத்துராமலிங்கம், மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இதேபோல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் பகுதி, வட்டம், ஒன்றியம் மற்றும் நகர செயலாளர்கள் மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை