அரசியல்

தமிழக அரசுக்கு கோரிக்கை - கை கோர்த்து நின்ற திமுக, அதிமுக, பாஜக

தந்தி டிவி

தமிழக அரசுக்கு கோரிக்கை - கை கோர்த்து நின்ற திமுக, அதிமுக, பாஜக

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர், நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி உள்ளிட்ட மலை கிராமங்களில் பிபிடிசி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 500 மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி 2028-ஆம் ஆண்டுக்குள் தனியார் தேயிலை நிறுவனம் காலி செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சூழலில் ஜூன் மாத இறுதிக்குள் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களையும் வெளியேற்றுவதற்கு, அவர்களை விருப்ப ஓய்வில் அனுப்பும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் அனைத்து கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை