இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய காரணத்தால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டி உள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, ரகசியத்தைக் காப்பாற்றாத கட்சி என்றும், இதை மு. க. அழகிரியே உறுதி செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். தேமுதிக தயவால் அதிமுக ஆட்சி நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.