அரசியல்

காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு - திமுக தலைவர் ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது வேதனையையும், கவலையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதெல்லாம், கலால் வரியை மோடி அரசு அதிகப்படுத்தியதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜ.க.வுக்குச் சாதகமான மாநிலங்களில் தேர்தல் வந்தால் மட்டும், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வரும் 10-ஆம் தேதி, காங்கிரஸ் நடத்தும் 'பாரத் பந்தில்' திமுக கலந்து கொள்ளும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்