அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி சென்னை அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், முகப்பேர், அண்ணாநகர் மேற்கு, கள்ளிக்குப்பம், ஒரகடம் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான அம்பத்தூர் தொழிற்பேட்டை, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை என தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த தொகுதி. 2025 டிசம்பர் 19 SIR வரைவுல தொகுதியில ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 407 பெண் வாக்காளர்கள், 56 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தமாக 3 லட்சத்து 4 ஆயிரத்து 511 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்துச்சு. 2008 தொகுதி மறுசீரமைப்புல உருவான அம்பத்தூர் தொகுதியில முதல் முறையாக நடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல்லையும், 2016 தேர்தல்லையும் அதிமுகவே வெற்றிய வசமாக்கியது. கடந்த 2021 தேர்தல்ல தொகுதியில சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த அலெக்சாண்டரை அதிமுக களமிறக்கிச்சு. ஆனா தொகுதி திமுக வசமாச்சு. அலெக்சாண்டருக்கு எதிராக திமுக களமிறக்கிய ஜோசப் சாமுவேல் தேர்தல்ல ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 554 வாக்குகள வசமாக்கி தொகுதிய வசமாக்கினாரு. 72 ஆயிரத்து 408 வாக்குகள வசமாக்கிய அலெக்சாண்டர் 42 ஆயிரத்து 146 வாக்குகள் வித்தியாசத்துல தோற்று தொகுதிய திமுகவிடம் பறிகொடுத்தாரு. தொகுதியில நாம் தமிழர் கட்சி 22 ஆயிரத்து 701 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 22 ஆயிரத்து 370 வாக்குகளையும் வாங்கியது தொகுதியில கவனிக்கப்பட்டிச்சு. இப்போது தேர்தல் நெருங்க industrial தொகுதியான அம்பத்தூர் தொகுதிய தக்க வைக்க திமுகவும், அதை தட்டிப்பறிக்க அதிமுகவும் வியூகம் போட பரபரக்க தொடங்கியிருக்கு அம்பத்தூர் தேர்தல் களம். இப்ப தேர்தல் நெருங்க, தங்களோட எதிர்பார்ப்புகள் என்னனு அம்பத்தூர் தொகுதி மக்கள் சென்னதை கேட்கப்போம்.