அரசியல்

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு : வழக்கை நடத்த தூத்துக்குடி தொகுதி வாக்காளருக்கு அனுமதி

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை, தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர், தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, வழக்கை தமிழிசை திரும்ப பெற்றார். இதை எதிர்த்து,தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை நடத்த வாக்காளருக்கு அனுமதியளித்தது.

CM Vijay | Chennai High Court | CM விஜய் தரப்பில் மனு - ட்விஸ்ட் கொடுத்த சென்னை ஐகோர்ட்

INDIA Alliance | இந்தியா கூட்டணி எடுத்த முடிவு? அப்ப உண்மை தானா

Supreme Court Of India | மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Nanjil Sampath |தவெக அரசை விமர்சித்தாரா நாஞ்சில் சம்பத்? - அரசியல் களத்தில் அதிரடி ட்விஸ்ட்

Weather Report | இந்த மாவட்டங்களில்.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்