கரூர் மருத்துவமனைக்கு திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி வழங்கிய நிதியை ஏற்கமறுத்த ஆட்சியரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வான செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார். ஒருகோடிய 3 லட்சம் ரூபாய் நிதியை ஏற்க முடியாது என மாவட்ட ஆட்சியர் நிராகரித்த நிலையில், அதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, திமுக எம்.எல்.ஏ. என்பதால், நிதியை ஏற்கவில்லையா என வினவினர். நிதியை ஏற்குமாறு நிராகரித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.