தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வவிநாயகம், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் மதம் மற்றும் அரசுக்கு எதிராக கனிமொழி சொல்லாத கருத்தை போட்டோஷாப் செய்து விஷமிகள் பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலி கணக்கு மூலம் பரப்பப்படும் அவதூறு, தனது நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக மனுவில் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமது பெயரில் போலி கணக்கு உருவாக்கி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.