அரசியல்

"அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து திமுக பயம்" - முதலமைச்சர் பழனிசாமி

அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பா.ம.க நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருவதாக குற்றஞ் சாட்டினார். பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்