அரசியல்

"பா.ம.க. கட்சி அல்ல, பல்கலைக்கழகம்" - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாராட்டு

பா.ம.க. கட்சி அல்ல, பல்கலைக்கழகம் என்று முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகளில் கையெழுத்து அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி. திரிபாதி அறிவித்துள்ளார். இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டிய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் ராமதாஸ் தவிர வேறு யாரும் இவ்வாறு பாராட்டி இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும், கனிவு பெருகட்டும் என்று ராமதாஸ் பாராட்டியிருப்பது ரசிக்கும் வகையில் இருந்ததாகவும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். ராமதாஸ் கட்சி நடத்தவில்லை, பல்கலைக்கழகத்தை தான் நடத்துகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். மக்கள் பிரச்சினை எதுவென்றாலும் , உடனடியாக அது குறித்து பேசுவது ராமதாசும், அன்புமணியும் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்