திமுக கூட்டணியில் 6 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவு திமுக கூட்டணியில் இதுவரை 43 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், மதிமுகவிற்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.