திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்றுடன் நிறைவடைகிறது... இறுதி நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விருப்ப மனுதாரர்களிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்... ஒருபுறம் வேட்பாளர் தேர்வு நடக்கும் நிலையில், மறுபுறம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தீவிரமாகியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸிற்கு 28 இடங்களும், சிபிஐ (CPI) கட்சிக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.நேர்காணல் முடிந்ததும், மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரை மற்றும் ரகசிய ஆய்வுகளின் அடிப்படையில் இறுதி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.