அரசியல்

திமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு - ராகுல், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு அழைப்பு

வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி, மாநில சுயாட்சி மாநாடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

இந்த மாநாட்டில் பங்கேற்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படுகிறது.

இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்களான சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில், இந்த மாநாட்டை நடத்த திமுக திட்டமிட்டிருப்பதாக, கூறப்படுகிறது.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்