டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் ஒன்றிய அரசு முடக்க நினைக்கிறது ... கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.