அந்த தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலர் தங்கவேல், அ.தி.மு.கவினருக்கு மட்டும் பூத் சிலிப் வழங்கியுள்ளார். இதை அறிந்த தி.மு.க தேர்தல் பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், அங்கு சென்று அந்த நபரை சிறைபிடித்து, தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து, அங்கு திரண்ட அ.தி.மு.கவினர் தங்கவேலுவை விடுவிக்கக் கோரி முழக்கம் எழுப்பியதால், அங்கு இருதரப்பினருக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை டிஎஸ்பி பாஸ்கரனுடன், திமுகவினர் கடும் வாக்குவாதம் செய்தனர். சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிறைபிடித்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலரை காவல்துறையிடம் தி.மு.கவினர் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.