அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் : தமிழகம், புதுச்சேரியில் தொகுதி வாரியாக திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், திமுக சார்பில் 40 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து அண்மையில் நடைபெற்ற திமுக உயர்நிலைகுழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு, திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மத்திய தொகுதிக்கு எஸ்.ஆர். ராஜா,ராஜேந்திரன், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், காஞ்சிபுரத்துக்கு கே.பி.பி.சாமி, தாயகம் கவி, கோவைக்கு முல்லைவேந்தன், மகேஷ் பொய்யாமொழி, திருநெல்வேலி தொகுதிக்கு ஆஸ்டின், குத்தாலம் கல்யாணம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பாளர்கள், அந்தந்த மாவட்ட செயலாளர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்