அரசியல்

அதிமுக கூட்டணி vs திமுக கூட்டணி : நேரடி போட்டி தொகுதிகள்

அதிமுக - திமுக இடையே 8 தொகுதிகளிலும் பாமக -திமுக இடையே 6 தொகுதிகளிலும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

அதிமுக - திமுக 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் தென் சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன.

திமுக - பாமக ஆறு தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் மத்திய சென்னை, தருமபுரி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன.

விழுப்புரம் தொகுதியில் பாமக விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

அதிமுக - திமுக - அமமுக ஆகிய 3 கட்சிகளிடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி நிலவுகிறது.

அதன்படி 3 கட்சிகளும் தென்சென்னை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி, மயிலாடுதுறை, நெல்லை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. அ.ம.மு.க. இதுவரை, 24 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு