தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மார்ச் 23-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.