அரசியல்

2004ம் ஆண்டு வாஜ்பாய் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியல் பற்றி அவர் அளித்த சுவாரஸ்ய பதில்கள்

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவின் போது, தமிழக அரசியல் பற்றி தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பல சுவாரஸ்ய தகவல்களை வழங்கி இருந்தார்.

தந்தி டிவி

*கடந்த 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்து, முடிவுகளுக்காக காத்திருந்த நேரத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என வாஜ்பாய் தெரிவித்தார்.

* பா.ஜ.க. வெற்றி மட்டுமல்ல கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளையும் மக்கள் மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள் என வாஜ்பாய் நம்பிக்கை தெரிவித்தார்.

* மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க., தெலுங்குதேசம் கட்சிகளுக்கு கதவு திறந்தே உள்ளதாகவும், தமிழகத்தின் பிரதிநிதித்துவம் மத்திய அமைச்சரவையில் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் வாஜ்பாய் தெரிவித்தார்.

* நீங்கள் விரும்பிய தமிழக தலைவர் யார் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டைப் பற்றி நான் எப்போது நினைத்தாலும் எனது நண்பரான திராவிட இயக்க ஜாம்பவான் மறைந்த அண்ணாதுரையை பற்றி நினைப்பேன் என்று தெரிவித்தார்.

* 1960 களில் நாங்கள் மேல்சபையில் ஒன்றாக இருந்தோம். அண்ணாதுரை என்ற அந்த மாநிலத் தலைவர் வலிமையான தேசிய கண்ணோட்டத்தோடு உள்ள தொகுப்பாக திகழ்ந்தார் என்று வாஜ்பாய் தெரிவித்தார்.

* தமிழக சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய தலைவராக திகழ்ந்த மறைந்த எம்.ஜி.ஆர். மீதும் மிகுந்த மரியாதை உண்டு என வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

* தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களாகவே தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகிச் சென்றதாகவும் வாஜ்பாய் தெரிவித்தார்.

* தி.மு.க. உடனான காங்கிரஸ் கட்சியின் கூட்டணி சந்தர்ப்பவாதம் என்றும் வாஜ்பாய் விமர்சித்தார்.

* பா.ஜ.க. கூட்டணிக்கு தான் ஆதரவு என்ற நடிகர் ரஜினி காந்தின் நிலையை பாராட்டுவதாக வாஜ்பாய் தெரிவித்தார். அவர் சிறந்த நடிகர். தமிழ் சினிமாவின் ஜாம்பவான் என்றும், சமுதாய உணர்வுள்ள நடிகர் ரஜினிகாந்த் என்றும் வாஜ்பாய் கூறினார்.

* தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது என்றும், தென் மாநிலங்களில் ஒரு காலத்தில் வடஇந்திய கட்சியாக பார்க்கப்பட்ட பா.ஜ.க. எதிர்காலத்தில் வளர எங்கள் கட்சியினர் கடுமையாக பாடுபடுகிறார்கள் என்றும் வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி