மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், தாம் முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் முக்கிய கொள்கை முடிவு எதுவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசின் நிதிக்கு மாற்றியதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.