அரசியல்

இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - திருநாவுக்கரசர்

ரூபாய் நோட்டு மாற்ற விவகாரம் நாட்டு மக்கள் ​மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

ரூபாய் நோட்டு மாற்ற விவகாரம் நாட்டு மக்கள் ​மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி எதற்காக இந்த நடவடிக்கையை அமல்படுத்தினாரோ அதில் அவர் தோல்வி அடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ரூபாய் நோட்டு மாற்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை காங்கிரஸ் கட்சியினர் இன்று கறுப்பு நாளாக அனுசரித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், மோடி அரசால் சீர்குலைக்கப்பட்ட பொருளாதாரத்தை, காங்கிரஸ் அரசு விரைவில் சீரமைக்கும் என்று தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே